வெறுமை

எத்தனையோ தடவை…எழுத முயன்று எழுத முயன்று தோற்றுப் போன ஒரு பதிவை…அன்று பதிப்பிக்காமல் இன்று பதிப்பிக்கிறேன்….

வெகுகாலமாக வேங்கையின் வேட்கைப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை அதற்கு என்னை மன்னிக்கவும்.

இன்று இதுகாலம் வரை தோனாதா வெறுமை தோன்றியவுடன் வேட்கையில் சரணடைகிறேன்.

கடந்த மூன்று மாதங்களில் பல விஷயங்கள் நடந்தேறி என்னை அலைக்களித்தது என்னமோ உண்மைதான். பல நிகழ்வுகளில் ஈடுபட்டு மனம் அமைதியின்றி உழைத்துக் கொண்டே இருந்தது. இந்தியப் பயணமாகட்டும், அகிலாவின் கல்யாணமாகட்டும், இரண்டு வார தேசிய சேவையாகட்டும், சங்கே முழங்காகட்டும்,  அறுவைசிகிச்சையாகட்டும், சென்ற வாரம் நடந்தேறிய நதிகளாகட்டும்…அப்பப்பா….எவ்வளவு நிகழ்வுகள்? ஒன்று முடிந்து ஒன்று கூட அல்ல, ஒன்று முடிவதற்கு முன்னாலேயே மற்றொன்று.  இதிலே, எத்தனை மனிதர்கள்? எத்தனை அனுபவங்கள்? இதனால் மனம் சென்ற தூரமும் ஆளமும் எவ்வளவு?

உடல்கண்ட களைப்பும் களிப்பும் எவ்வளவு?

இது அத்தனையும் முடிந்த பிறகு, மனதிலே தோன்றும் அந்த வெறுமையோடு நிற்கிறேன். தவறு.என்னால் நிற்க முடியவில்லை. என்னோடு இருபதி நான்கு மணிநேரமும் முனங்கிகொண்டே இருந்த கைப்பேசியை என்று மறுபடிமறுபடி பார்த்து அதன் அமைதிகண்டு வெறுக்கிறேன்.

பள்ளிவேலைகளில் ஆர்வமின்றி, அதை தவிர்க்க நினைக்கிறேன், எனது மனநிலை சரியான பின்பு அவற்றை செய்யலாம் என்று. ஆனால் அதைச் செய்யவே மாட்டேன் என்பது போலத் தோன்றுகிறது.

தொலைக்காட்சியில் அமர்ந்தாலோ, படங்களை இரசிக்க முடியவில்லை.

புத்தகங்களைப் பார்த்து பக்கங்களை திருப்ப மறுக்கிறது கைவிரல்கள்.

நண்பரோடு பேசலாம் என்றால் யாரிடம் பேசுவது? என்ன பேசுவது?

எனது வெறுமையை பகிர்ந்து கொண்டு அவர்களையும் வெறுமையாக்குவதா? மனம் சம்மதிக்கவில்லை.

கவிதை எழுதவும், இரசனையில் இரங்கவும் பலம் இல்லாததால் மனம் இயங்க மறுக்கிறது. எனது வெறுமையை வாக்கியத்தில் எப்படி காண்பிக்கலாம் என்று யோசிக்ககூட முடியவில்லை.

இவ்வளவு வெறுமையும் விரக்தியும் எங்கிருந்து வந்தது? ஏன் என்னால் இதை மாற்றமுடியவில்லை, மனம் போன போக்கிலே விரல்கள் தட்டச்சு செய்கின்றன!

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s