வெகு நாட்கள் ஓய்வெடுக்க மறந்து விட்டேன் போலும், தேடலிலே தொலைந்துபோன நான், இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். மாதக்கணக்காகிவிட்டது ஒரு பதிவு செய்து, சரி மனப்பதிவுகளை, வலைப்பதிவுகளாய் அச்சிட ஆவா கொண்டு, மீண்டும் எழுத்தத் தொடங்குகிறேன்.
வேட்கையைத் தொடங்கி சுமார் இரண்டு வருடங்களாகிவிட்டது, என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. மாத இதழ்கள் ஆண்டு மலர் வெளியிடுவது போல சிறந்த பதிவுகளை தொகுத்து அச்சிட்டாலும் படிப்பதற்கு ஆளில்லை. ஆகையால் ஒரு பெரிய விஷயமாக கொள்ளாமல், தொடர்ந்து, குறுகிய இடைவேளைகளில் எழுதுவதே உத்தமம்.அதையே நானும் செய்ய நினைக்கிறேன். முதலில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த எந்திரன்!