வெகு நாட்களுக்கு பிறகு இன்று, மீண்டும் வேட்கையில் எழுதிகிறேன். வழக்கம் போல இல்லாமல் இனியாவது தொடர்ந்து எழத முடிப்போகிறேனோ இல்லையோ, தெரியவில்லை…இருந்தும் இன்று எழுதியே தீருவது என்று ஒரு முடிவுடன் தான் எழுதுகிறேன்.
வழக்கமாக எழுதாததற்கு, எதையாவது காரணம் சொல்லுவேன். ஆனால் இம்முறை வேறு, எவ்வளவு முயன்றும் வெகுநாட்கள் எழுத முடியவில்லை. மனதிர்கள் நாம் எல்லோரும் உணர்ச்சி மிருகங்கள். ஒரு துயரமோ, அதிர்ச்சியோ, ஏமாற்றமோ, மகிழ்ச்சியோ, எப்படி இரசாயண ரீதியில் உடலில் மாற்றம் ஏற்படுகிறதோ, அதே மாதிரிதான், இச்சம்பவங்களால் மனோவியல் ரீதியிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஏதோ ஒரு கோபத்தால், ஏமாற்றத்தால், துடிப்பிழந்து மனம் உடைந்து போனதனால் என்னையே தொலைத்த ஒர் உணர்வு. எத்துனை பேர் கேட்டபோதிலும், எவ்வளவு முறை முயன்ற போதிலும், எழுத நினைத்ததும், எழுத முயன்றதும் கைகூடாமலே போய்விட்டது. அல்லது, இப்படி மனோவியல் ரீதியில் மாற்றங்கள் உண்டு என்ற அறிவு தெரிந்ததால், அதைக் காரணமாகச் சுட்டிக்காட்டி எழத மறுத்தேனோ என்னமோ. ஆனால் மனம் உடைந்தது உண்மை, அதனால் பலகீனப்பட்டு, வருந்தி, என்னை வருத்திக் கொண்டது உண்மை. அதனால் இந்த காயங்களுக்கு மருந்து போட, பிறருக்காக எழுதுவதை விட்டு விட்டு, எனக்காக எழுதயே தீரவேண்டும் என்று எழுதும் பதிவு இது.
ஆனால் என்ன எழுதலாம் என்று இன்னும் தெரியவில்லை….இவ்வளவு நாட்கள் எழுதிய பதிவுகளில் எவ்வளவோ எழுதியிருக்கிறேன், இன்று மட்டும் ஒன்றுமே எழுதாமல்….