வெண்(பா)பொங்கல்/ வெய்ணா கேம்பிட்

வருடம் பிறந்து 20 நாட்களுக்குப் பிறகு வேட்கைக்கு வாசம் செய்கிறேன். அணைவருக்கும் பொங்கல் எப்படிச் சென்றது? பொங்கலோடு, இனிதே இன்பமும் செல்வமும் வாழ்வில் பொங்கி வழிந்ததா. விழாக்கள் பற்றிப் பேசுகையில் பலருக்கு அதன் பூர்வீகம் தெரியாது. பொங்கல் பிறந்த கதைபேசப் போவதில்லை நான், ஆனால் இப்படி ஒவ்வொரு விழாக்காலத்துக்கும் வாழ்த்துக்கள்மட்டும் சொல்லுக்கொண்டு, அதன் அர்த்தமோ, பூர்வீகமோ தெரியாமல் இருப்பவர்களுக்கு நாசர் கொடுத்தப் பேட்டி ஒரு சரவெடி. மழையால் பல இடங்களில் பயிர்நாசம் கண்டு, பொங்கல் கொண்டாட முடியா உழவத் தோழர்களுக்கு நாமும் அனுதாபங் கொள்வோம்.
http://www.youtube.com/watch?v=94t9M1Uyd04

********************************************************************************************************

சரி, ச்செஸ் இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன், பல சம்பர்தாய தொடக்கங்கள், புரிந்து கொள்வதற்கும் வேறு படுத்துவதற்கும் சிறிது காலம் பிடிக்கும். ஆனால் இத்தொடக்கங்கள் ஆட்டத்தின் உச்சகட்டங்களில் பெரிதும் கைகொடுப்பவை…ஆனால் இந்த தொடக்கங்களை ஒரே அடியாக பின்பற்றுபவன் சிறந்த ஆட்டகாரனல்ல, பல வேறுபாடுகள் உள்ளன. காஸ்பராவ் போன்ற ஆட்டக்காரர்கள், வலிந்தே பல முறை திசை மாறியிருக்கிறார்கள். மேலும் படித்து புரிந்தாலும், முடிந்தாலும் சில ச்செஸ் சவால்களை பதிவிக்கிறேன்.

*********************************************************************************************************

வெண்பாவில் ஒரு சில முயற்சிகள் எடுத்துப் பார்த்தேன். பல கட்டமைப்புகள் இருப்பதாக பலர் கூறி பயமுறுத்துவது மிகைப்படுத்தப் படுவதாகவே படுகிறது. தளைதட்டாதிருத்தல் அவசியம்.
சீர்களை சரியாக அமைக்கத் தெரிந்து கொண்டால், வெண்பா சுலபமாகவே படுகிறது. வெண்பா என்றவுடன் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு, ஓசை நயம் தெரிபவர்களுக்கு வெகுசுலபமானது வெண்பா. இணையத்திலும் பல வளைத்தளங்கள் உள்ளன.(கீழே குறிப்பிடுகிறேன், ஒன்றில் நீங்கள் எழுதியதை சரிபார்க்கவும் முடியும்).

இப்போ தினந்தினம், எரிச்சல் தரும் முதலாளியிடம் அல்லல் படும் அன்பர்களுக்கு ஒரு சிறு முயற்சி:

மனசாட்சி இல்லா மனிதரிடம் நாள்முழுதும்
மானச்சீர் கெட்டுபணி செய்தலைநீ ஆனமட்டும்
தள்ளிவைஇல் லைபோடா மூடாவென் றுன்இரத்தை
அள்ளிவைய வன்முகதிற் கை.

இதோ வளைத்தளங்கள்:
http://www.virtualvinodh.com/avalokitam (இதில் தான் செய்யுளை சரிபார்த்திட முடியும்)
http://sezhunkaarikai.blogspot.com/2011/07/blog-post.html  (இது இலக்கண கட்டமைப்புகளை எளிதாய்ச் சொல்லும் தளம்)

இது போனஸ்: தமிழிலே பல அரிய புத்தகங்கள் உள்ளன, நூலகத்தில் கிடைக்கும் புத்தக்கடையில் கிடைக்கும், வீட்டிலே சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் அன்பர் கையில்
நாட்டின் பல நூல்களை ஒரே தளத்தில் இலவசமாக இறக்குமதி செய்ய யாரோ செய்த முயற்சியை நான் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பெயர்த் தெரியா நண்பரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

http://knowingyourself1.blogspot.com/2011/04/free-tamil-books-tamil-pdf-books.html

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s